லோகோ வடிவமைப்பு உரிமை: கட்சியிலிருந்து விலகிய சுனில் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்

By ஐஏஎன்எஸ்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அக்கட்சியின் ‘லோகோ’வை வடிவமைத்த சுனில் லால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தற்போது கட்சியை விட்டு விலகிவிட்ட சுனில் லால், லோகோவின் காப்புரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சுனில் லால் நேற்று லக்னோவில் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சிக்கான லோகோவை நான்தான் வடிவமைத்து கொடுத்தேன். இதன் காப்புரிமை என்னிடம் உள்ளது. இதை நான் கட்சிக்கு மாற்றித் தரவில்லை.

இந்நிலையில் கட்சிக் கொள்கைகளில் இருந்து அவர்கள் விலகிச் செல்வதால் நான் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன். எனவே லோகோவை பயன்படுத்தக் கூடாது என கேஜ்ரிவாலுக்கு கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், தற்போது எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்