முன்னாள் எம்.பி. அளித்த புகாரின்பேரில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் எம்பியும் உத்கல்பாரத் அமைப்பின் தலைவருமான எம்.ஏ. கரபேலா ஸ்வைன் என்பவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:
சிபிஐ இயக்குநர் பதவிக்கு முன்னாள் காவல் துறை தலைவர் பிரகாஷ் மிஸ்ரா பரிசீலிக்கப்பட்டார். அவருக்கு அந்த பதவி கிடைத்து விடக்கூடாது என்பதற்காக முதல்வர் நவீன் பட்நாயக்கும் கண்காணிப்புத் துறை இயக்குநர் கே.பி.சிங்கும் சதித்திட்டம் தீட்டினர் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
பிரகாஷ் மிஸ்ரா ஒடிஸா காவல் துறை வீட்டுவசதி கார்ப்பரேஷன் தலைமை நிர்வாகியாக இருந்த போது குறிப்பிட்ட சிலருக்கு சாதகமாக ஊழலில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் சிபிஐ இயக்குநராகும் வாய்ப்பு பறிபோனது.
மேலும் ஊழல் புகார் தொடர்பாக பிரகாஷ் மிஸ்ராவுக்கு எதிராக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அதனை விசாரித்த நீதிபதி பாரிஜா கடந்த 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நேர்மையான அதிகாரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பிரகாஷ் மிஸ்ராவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago