முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு வங்கதேச அரசு வழங்கிய விடுதலைப் போர் கவுரவ விருதை அவரது குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்துக்கு நேற்று நேரில் சென்ற பிரதமர் மோடி இந்த விருதை வழங்கினார். அப்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் உடன் சென்றிருந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாஜ்பாய்க்கு வங்கதேச அரசு வழங்கிய விடுதலைப் போர் கவுரவ விருதை அவரது குடும்ப உறுப்பினர்களான, ரஞ்சன் பட்டாச்சார்யா, நமிதா பட்டாச்சார்யா மற்றும் நிஹாரிகா பட்டாச்சார்யா ஆகியோரிம் பிரதமர் மோடி வழங்கினார்” என கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வங்கதேசம் சென்றிருந்த மோடி, வாஜ்பாய்க்கு அந்நாட்டு அரசு வழங்கிய உயரிய விருதினை அவர் சார்பில் அந்நாட்டு அதிபர் அப்துல் ஹமீதிடமிருந்து பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேச விடுதலைப்போரின்போது வாஜ்பாய் ஆதரவாக செயல்பட்டதை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago