மேகி நூடுல்ஸை விற்பனையில் இருந்து திரும்பப் பெறுவதாக நெஸ்லே அறிவிப்பு

By ஐஏஎன்எஸ்

மேகி நூடுல்ஸை விற்பனையிலிருந்து இருந்து திரும்பப்பெறுவதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் இன்று அதிகாலை (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் டெல்லி அரசு மேகிக்கு 15 நாள் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை விற்பனையிலிருந்து இருந்து திரும்பப்பெறுவதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இருப்பினும் தங்கள் நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் உண்பதற்கு உகந்ததே விரைவில் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேகி நூடுல்ஸ் சர்ச்சைக்குள்ளான நிலையில் பிக் பஜார், வால் மார்ட் போன்ற பெரும் அங்காடிகள் மேகி விற்பனையை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்