உருது கவுன்சில் தலைவர் நியமனத்தில் சர்ச்சை

By அனுராதா ராமன்

தேசிய உருது மொழி மேம்பாட்டு கவுன்சில் தலைவராக சையது அலி கரீம் நியமிக்கப்பட்டிருப் பதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

டெல்லி பல்கலைக்கழகத்தில் உருது மொழித் துறை பேராசிரி யராகப் பணியாற்றிய கரீம் கடந்த வாரம் தேசிய உருது மொழி மேம்பாட்டு கவுன்சிலர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த கவுன்சில் மத்திய மனித ஆற்றல் துறையின் கீழ் இயங்கும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் தலைவராக பேராசிரியர் கரீம் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

அவர் மீது பாலியல் துன்புறுத்தல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட் டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலை யில் அவரை கவுன்சில் தலை வராக தேர்ந்தெடுத்தது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். கரீமின் வழிகாட்டுதலில் படித்த ஆராய்ச்சி மாணவி ஒருவரை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அந்த மாணவி யின் மனநலம் பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்த கமிட்டி சார்பில் கரீமுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சி மாணவிகளுக்கு அவர் வழிகாட்டியாக இருக்கக்கூடாது என்றும் கமிட்டி உத்தரவிட்டது.

இதனிடையே சக பேராசிரியை ஒருவரும் கரீம் மீது பாலியல் புகார் அளித்தார். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுதவிர அவர் மீது சில நிதி மோசடி புகார்களும் உள்ளன.

மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறையின் அழுத்தம் காரணமாகவே கரீம் தலைவராக நியமிக்கப்பட்டதாக உருது கவுன்சில் வட்டாரங்கள் தெரி வித்திருப்பதால் கல்வியா ளர்கள் கடும் அதிருப்தி தெரி வித்துள்ளனர். இவ்விவகாரத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராகவும் பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்