துப்புரவு தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஐஏஎன்எஸ்

ஊதியத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வரும் 15-ம் தேதிக்குள் சம்பளம் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக தங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் கடந்த 2-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

போராட்டத்தின் உச்சகட்டமாக கிழக்கு டெல்லி சாலை முழுவதிலும் குப்பையை கொட்டி நிரப்பி துப்புரவு தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிளார்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கபட வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள தொகையும் வரும் 15-ம் தேதிக்குள் வழங்கப்படவேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கிழக்கு டெல்லி சாலையில் கொட்டி நிரப்பப்பட்டிருக்கும் குப்பை குவியலை உடனடியாக அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் ஊதிய விவகாரம் தொடர்பாக வரும் 19-ம் தேதிக்குள் டெல்லி அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்