பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு, நிதிஷை சமாளிக்க பாஜக புதிய திட்டம்: அதிக அளவில் யாதவ் வேட்பாளர்களை களமிறக்க தீவிரம்

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் கூட்டணியை சமாளிக்க பாஜக புதிய திட்டம் வகுத்து வருகிறது.

லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட பப்பு யாதவ் எம்.பி. உதவியுடன் இருபதுக்கும் மேற்பட்ட யாதவ் சமூகத்து வேட்பாளர்களை களமிறக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

பிஹாரில் யாத் சமூகத்து வாக்காளர்கள் அதிக அளவாக சுமார் 20 சதவீதம் உள்ளனர். இதனால் அம்மாநில அரசியல் யாதவர்களை மையமாக வைத்து நடைபெறுவது வழக்கம். யாதவ் சமூகத்தை சேர்ந்தவரான லாலு, ஒவ்வொரு தேர்தலிலும் தனது சமூகத்தினருக்கு அதிக அளவில் வாய்ப்பு தருகிறார். இத்துடன் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தள தலைவரும் மாநில முதல்வருமான நிதிஷ்குமாருடன் கை கோர்த்துள்ளார். இதனால் பலமடைந்துள்ள அந்தக் கூட்டணியை சமாளிப்பதற்கு, யாதவர்களை தங்கள் பக்கம் திருப்ப பாஜக திட்டமிட்டு வருகிறது.

யாதவர் வேட்பாளர்களை அதிகமாக போட்டியிட வைப்பதுடன் ராஜீவ் ரஞ்சன் யாதவ் எனப்படும் பப்பு யாதவுடனும் பாஜக ஓர் ஒப்பந்தம் இடவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “இதுவரை நிதிஷுக்கு எதிராக வாக்களித்து வந்த யாதவர்கள், அவருடன் லாலு இணைந்ததால் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் யாதவர்கள் வாக்குகளை பெறும் எங்கள் முயற்சி எங்களுக்கு ஆட்சி அமைக்க உதவியாக இருக்கும். இதற்காக அந்த சமூகத்தின் பப்பு யாதவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள யோசித்து வருகிறோம். பப்பு யாதவ் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இருப்பதால் எப்படிப்பட்ட ஒப்பந்தம் இடுவது என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும்” என்றனர்.

பிஹாரில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முறையே 86, 64, 54 மற்றும் 39 யாதவர்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பாஜக சார்பில் கடந்த 2005 தேர்தலில் நிறுத்தப்பட்ட 10 யாதவர்களில் 7 பேர் வெற்றி பெற்றனர். மீண்டும் 2010-ல் நிறுத்தப்பட்ட 10 யாதவர்களில் 8 பேர் வெற்றி பெற்றனர். எனவே இந்தமுறை சுமார் இரண்டு டஜன் யாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்த பாஜக திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இத்துடன் பிஹார் மாநில பாஜக தலைவர் நந்த கிஷோர் யாதவ், மத்திய இணை அமைச்சர் ராம்கிருபால் யாதவ் ஆகியோரின் பிரச்சாரம் யாதவர்கள் மத்தியில் பலன் தரும் எனவும் பாஜக நம்புகிறது.

இதில் ராம்கிருபால், 2014 மக்களவைத் தேர்தல் வரை லாலுவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவர்களுடன் பப்புவின் ஆதரவும் தமக்கு பலன் தரும் என பாஜக நம்புகிறது.

பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பப்பு யாதவ், அம்மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கி பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர். மக்களவை தேர்தலுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். ஐந்தாவது முறை எம்.பி.யாக இருக்கும் இவருக்கு, நேபாள எல்லையில் அமைந்துள்ள சீமாஞ்சல் பகுதி மாவட்டங்களில் அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியின் மதேபுரா தொகுதியில் கடந்த மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவை தோற்கடித்தார் பப்பு.

இவரது மனைவியான ரஞ்சிதா ரஞ்சன் யாதவ், அருகிலுள்ள சுபோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இரண்டாவது முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பப்பு, ‘ஜன் கிராந்தி அதிகார் மோர்ச்சா’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி யாதவர்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு தேடி வந்தார். தற்போது லாலுவின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இவரது கட்சி சார்பில் நிறுத்தப்படும் யாதவர் வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவர்கள், லாலு - நிதிஷ் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்