சமையல் எரிவாயுவுக்கு அளிக்கப்படுவதைப் போன்று, மண்ணெண்ணெய்க்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடி மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 25 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப் படவுள்ளது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது, “மண்ணெண்ணெய்க்கு நேரடி மானியத் திட்டத்தை 25 மாவட்டங்களில் முதல்கட்டமாக அறிமுகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம்.
வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் இத்திட்டம் அறிமுகமாகும். இத்திட்டத்தின் நோக்கம் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைப்பது அல்ல. மாறாக, ஏழைகளுக்கும் பயனாளிகளுக்கும் சரியான அளவில் கிடைக்கச் செய்வதாகும்.
மேலும் எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலையின் ஆதாயத்தைப் பெறுவதற்காக நீண்டகால ஒப்பந்த அடிப் படையில் எண்ணெய் கொள்முதல் செய்வதற்குப் பதில் சந்தையில் அவ்வப்போது நிலவும் விலையில் கொள்முதல் செய்வது ஊக்குவிக்கப்படும்” என்றார்.
நேரடி மானியத் திட்டம் மூலம் 4 கோடி போலியான சமையல் எரிவாயு நுகர்வோர் களையெடுக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago