சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி விசாரணை

By ஏஎன்ஐ

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸி கூறும்போது, “சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் சோதனை நடத்தப்படும்” என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூருக்கும் சுனந்தா புஷ்கருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஐபிஎல் கொச்சி அணியை ஏலத்தில் எடுத்தனர். இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் சுனந்தா இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரிக்க டெல்லி போலீஸ் சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்