கேரளத்துக்கு சிறுவர், சிறுமியர் கடத்தலா? தொடரும் சர்ச்சை: சிறப்பு போலீஸ் குழு விசாரணை

பாலக்காடு ரயில்நிலையத்தில் வந்திறங் கிய நூற்றுக்கணக்கான 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் ஏஜென்ட்டுகள் மூலம் கடத்தி வரப்பட்டவர்களா? என்கிற சர்ச்சை இன்னமும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக கேரள போலீ ஸார், 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சிறுவர், சிறுமியர் பெற்றோர் சம்மதத்துடன் அழைத்து வரப்பட்டவர்களா? அல்லது அவர்களிடம் விலைக்கு வாங்கி வரப்பட்டவர்களா என்பது குறித்து விசாரிக்க கேரள சிறப்பு போலீஸ் குழுவினர் ஜார்கன்ட், உத்தரகண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பாலக்காடு ரயில்நிலையத்துக்கு வந்த பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து நூற்றுக்கணக்கான நண்டும், சிண்டுமாக சிறுவர், சிறுமியர்கள் வந்திறங்கினர். அவர்கள் அழுக்கடைந்த உடை, இஸ்லாம் மத அடையாளமான குல்லா, பர்தா என இருந்ததைக் கண்டு கேரள ரயில்வே போலீஸார் அதிர்ந்து போயினர்.

ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களா?

பிளாட்பாரத்தில் இவர்களை ஒருங் கிணைத்துக் கொண்டிருந்த ஆட்களை விசாரித்தபோது, இந்தச் சிறுவர் கள் பிஹார், ஜார்கன்ட் மாநிலங்களில் இருந்து வந்து கோழிக்கோட்டில் உள்ள ஆதரவற்றோர் பள்ளிக்கூடங் களில் இலவசமாக தங்கிப் படிப்பவர்கள். கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்புகிறார்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.

குழந்தைகளிடம் விசாரித்தபோது அவர்கள் இந்தி, மராத்தி, பிஹாரி என புரிபடாத மொழியில் பேசியிருக்கின்றனர். அத்துடன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியிருக்கின்றனர். அதையடுத்து சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார், மத்திய புலனாய்வு போலீஸார், உள்ளூர் போலீஸார் என குழுவாகச் சேர்ந்து அவர்களை கணக்கிட்டபோது 456 சிறுவர், சிறுமியர் இருந்துள்ளனர்.

முன்னுக்குப் பின் முரண்

அவர்களை அழைத்து வந்த ஆட்களை விசாரித்தபோது, ’இந்தச் சிறு வர்கள் கோழிக்கோடு அருகே உள்ள ஆதரவற்றோர் அரபி பள்ளியில் படிப்பவர்கள் என்று சாதித்துள்ளனர். சிறுவர், சிறுமியரை சோதனையிட்டதில் வேறு மாநிலத்திலிருந்து வந்து கேரள மாநிலத்தில் தங்கி படிப்பதற்கு உண்டான சான்றிதழ்கள் 156 பேரிடம் மட்டுமே இருந்திருக்கிறது. 300 பேருக்கு மேல் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே போலீஸார் இந்தச் சிறுவர், சிறுமி யரை உள்ளூர் சமூக நலத் துறையின் மூலம் முட்டிக்குளங்கரை என்கிற மண்டபத் தில் தங்க வைத்து, உணவு வழங்கி விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆதரவற் றோர் அரபி பள்ளியில் விசாரித்தபோது, அவர்கள் 156 பேர் மட்டுமே தங்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை அழைத்து வந்தவர்கள் வடமாநிலத்திலிருந்து அழைத்து வரும் ஏஜென்ட்டுகள் எனவும், மற்ற குழந்தைகளுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கைகழுவினர்.

சிறுவர், சிறுமியரை அழைத்து வந்த 8 பேரிடமும் மீண்டும் மீண்டும் விசாரித் ததில், நாங்கள் இந்தச் சிறுவர், சிறுமி யரை கோழிக்கோடு பள்ளியில் மட்டு மல்ல; மலப்புரத்தில் உள்ள வேறு ஆதரவற்றோர் பள்ளிகளில் சேர்க்கவே அழைத்து வந்தோம். அதற் குரிய ஏஜென்ட் ஒருவர் எங்களுடன் வந்தார்.

நீங்கள் விசாரிப்பது தெரிந்தவு டன் ரயில்நிலையத்திலேயே காணாமல் போய்விட்டார்’ என்று தெரிவித்துள்ளனர். அதன்பிறகுதான் இதில் மேலும் நிறைய வில்லங்கம் இருப்பது அறிந்து பிடிபட்ட 8 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறது கேரள போலீஸ்.

சிறுவர், சிறுமியர் மீட்பு

இதே ஆட்கள் ஏற்கெனவே வடமாநிலங்களிலிருந்து சிறுவர் சிறுமியரை அழைத்து வந்து கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், மலப்புரம் என பல்வேறு அனாதைப் பள்ளி களுக்கு சப்ளை செய்தது தெரிய வந்திருக் கிறது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் சில இடங்களிலிருந்து நூற்றுக் கணக்கான சிறுவர், சிறுமியரை மீட்டுள் ளனர் போலீஸார். அப்படி மீட்கபட்ட சிறுவர், சிறுமியரை சேர்த்து நேற்று வரை 589 குழந்தைகள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் போலீஸார். அவர் களில் சான்றிதழ் உள்ள 156 சிறுவர், சிறுமியரை மட்டும் கோழிக்கோடு ஆதரவற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் போலீஸார் ஒப்படைத்தனர். இவர்களை அழைத்து வந்த 8 பேரை கைது செய்தும் உள்ளனர். இவர்களுடன் வந்த முக்கிய நபரை தேடி வருகிறது போலீஸ் டீம்.

விசாரணை நடத்தி வரும் கேரள போலீஸார் சிலரிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது. இந்த சிறுவர், சிறுமியரின் பெற்றோர் வறுமையில் வாடுகிறவர்கள். அவர்கள் சம்மதத்துடனே இலவசமாக படிக்க வைக்க அழைத்து வந்தோம் என்று பிடிபட்டவர்கள் சொல்கிறார்கள். ஆனால், சிறுவர்களோ ரயில் டிக்கெட்டுக்கு பணம் பெற்றுக்கொண்டே அழைத்து வந்ததாகவும், டிக்கெட் எடுக்காமல் அந்தக் காசை வந்தவர்கள் சுருட்டிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த சிறுவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதுபோன்ற சிறுவர், சிறுமியரைக் காட்டி வெளிநாட்டிலிருந்து பணம் வசூலிக்கும் ஆதரவற்றோர் இல்லங்கள் கேரளத்தில் குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் நிறைய உள்ளன. பல்வேறுபட்ட மத அமைப்புகளும் இதை நடத்துகின்றனர். அவர்கள் பள்ளி நடத்தி படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்களா? அல்லது வீட்டு வேலையில் இந்த சிறுவர், சிறுமியரை பயன்படுத்தப்படுகிறார்களா? அல்லது சில வருடங்கள் வளர்த்து ஆளாக்கிய பிறகு வெளிநாடுகளுக்கு அனுப்பி வருமானம் ஈட்டுகிறார்களா? அதற்காகத்தான் இந்த சிறுவர், சிறுமியர்களை கடத்தி வந்துள்ளனரா? இப்படி பல சந்தேகங்கள் உள்ளன. இதை விசாரிக்க ஸ்பெஷல் டீம் வடமாநிலங்களுக்கு சென்றுள்ளது” என்று தெரிவித்தனர்.

விற்பனைக்கு கடத்தல்?

சிறுவர்கள் கடத்தப்பட்டதாக சொல் லப்படும் விவகாரத்தில் பாலக்காடு போலீ ஸார் மௌலானா அப்துல்லா, அப்துல் அலி, முகம்மது இதிலி, ஆலம் கீர், ஜெபஜீன் உதிர், முகம்மது, மன்சூர் வுலா, அபுபக்கர் ஆகியோரை கைது செய் தனர்.

போலீஸ் விசாரணையில், எங்களை போல் வட மாநிலத்திலிருந்து குழந்தை களை வாங்கி வர நிறைய ஏஜென்ட்டு கள் உள்ளனர் என்று கைதானவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள தாக தெரிவிக்கின்றனர் போலீஸார். எனவே இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்பட்டிருப்பது தெரிய வரும் என்று கருத்து தெரிவிக்கின்றனர் கேரள மக்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE