கடந்த 22 ஆண்டுகளில் முறையற்ற வகையில் நீதிபதிகள் நியமனம் நடந்ததாக ஆதாரத்துடன் பட்டியல் தாக்கல் செய்ய முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரங்களை மேற்கொண்டு வரும் `கொலீஜியம்’ அமைப்பை மாற்றி, தேசிய நீதிபதி கள் நியமனக்குழுவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சலமேஸ்வர், மதன் லோக்கூர், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, `சட்டம் இயற்றுவது மத்திய அரசின் அதிகாரம். அதை கேள்வி கேட்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை’ என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிட்டார். நேற்று 2-வது நாளாக இந்த வழக்கில் வாதம் தொடர்ந்தது.
அப்போது, `கடந்த 1993-ம் ஆண்டு வரை, நீதிபதிகளை நியமிக் கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருந்தது. நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனத் தில் எந்த இடத்திலும் சொல்லப் படவில்லை. நீதிபதிகள் நியமனத் தில் நீதித்துறையின் பங்கு இருக்க வேண்டும் என்பதும் அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சமாக இடம்பெறவில்லை. மேலும், நீதிபதி கள் நியனமத்துக்கும் நீதித்துறை யின் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. `கொலீஜியம்’ முறையில் நீதிபதிகள் நியமனம் நடப்பதற்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்ட நீதியரசர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம், தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளனர். இப்படி ஒரு நிலை வரும் என்பதை அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரே நினைத்துப் பார்த் திருக்க மாட்டார். அவரே சகித்துக் கொள்ள மாட்டார்’ என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், `அம்பேத்கரால் கூட சகித்துக் கொள்ள முடியாத நிலை நாட்டில் பலமுறை ஏற்பட்டுள்ளது. `கொலீஜி யம்’ நியமன முறை தொடங்கிய பிறகு, தவறாக நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளதாக உங்களால் ஆதாரத்துடன் பட்டியல் தாக்கல் செய்ய முடியுமா’ என்று கேள்வி எழுப்பினர். இவ்வழக்கில் வாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago