துடைப்பம் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது: கேஜ்ரிவால் மீது வடிவமைப்பாளர் வழக்கு

By ஐஏஎன்எஸ்

ஆம் ஆத்மிக்கு வடிவமைத்து தந்த துடைப்பம் சின்னத்தை திரும்ப பெறுவதாகவும், இனி அதனை அந்தக் கட்சி பயன்படுத்தக் கூடாது என்றும் கட்சியிலிருந்து விலகிய அதன் வடிவமைப்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆம் ஆத்மி சின்னத்தை வடிவமைத்த சுனில் லால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்குதொடர்ந்துள்ளார்.

இது குறித்து சுனில் லால் தரப்பில் கூறும்போது, "ஆம் ஆத்மி கட்சிக்கான துடைப்பம் சின்னத்தை நானே வடிவமைத்தேன். அப்போது எனக்கு கட்சியின் மீது ஈடுபாடும் நம்பிக்கையும் இருந்தது.

இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நான் வடிவமைத்த சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சி தலைமையிடம் பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு செவி கொடுக்காமல், கட்சி போஸ்டர்களில் துடைப்பம் சின்னத்தை உபயோகிக்கின்றனர்.

கட்சியின் செயல்பாடுகள் நினைத்த அளவில் இல்லாததால் கட்சிக்காக நான் வடிவமைத்து அளித்த சின்னத்தை திரும்பப் பெறுகிறேன். நான் வடிவமைத்த சின்னத்தை தனியுரிமை பெற்றுள்ளேன். எனது அனுமதியின்றி அதனை ஆம் ஆத்மி உபயோகிக்க முடியாது" என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் அகிலேஷ் சந்த்ரா மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்