திருப்பதி வனப் பகுதியில் நேற்று மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல கடப்பாவில் ரூ.8 கோடி மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த மே மாதம் 7-ம் தேதி, செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலா ளர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத் தைத் தொடர்ந்து ஆந்திர போலீஸார் சென்னை, பெங்க ளூரு, கொல்கத்தா, ஹரி யாணா உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் கும்பலை கைது செய்து அவர்களிடமிருந்து கோடிக் கணக்கான மதிப்புள்ள செம்மரங் களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சீனாவைச் சேர்ந்த 2 செம்மர வியாபாரிகளை கைது செய்த போலீஸார், அவர்கள் கொடுத்த முக்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று திருப் பதியை அடுத்துள்ள சந்திரகிரி முங்கிலிபட்டு சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் கடத்தும் கும்பலுக்கும் அதிரடி போலீஸா ருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் செம்மர கடத்தல் கும்பல் கற்கள் மற்றும் கோடரிகளால் போலீஸாரை தாக்கியது. இதனைத் தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரை கைது செய்து, ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரங் களை பறிமுதல் செய்தனர். இந்த மோதல் சம்பவத்தில் 5 போலீஸார் காயமடைந்தனர். இவர்கள் திருப்பதியில் உள்ள அரசு ருய்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல கடப்பா மாவட் டம், திப்பாரெட்டி கூட்டு ரோடு பகுதியில் நேற்று காலை போலீ ஸார் வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 4.2 டன் எடையுள்ள 170 செம்மரங்கள் இருந்தது தெரிய வந்தது.
ரூ.8 கோடி செம்மரங்களை பறிமுதல் செய்த போலீஸார், பெங்களூரு, ராய்ச்சூர், கடப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கார்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரபல கடத்தல்காரர் கங்கி ரெட்டியின் முக்கிய கூட்டாளியான சிவசங்கரும் ஒருவர் ஆவார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago