ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக வகேலா பதவியேற்பு

By ஐஏஎன்எஸ்

ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஹெச்.வகேலா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் எஸ்.சி.ஜமீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சட்ட அமைச்சர் அருண் குமார் சாஹூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி டி.ஹெச்.வகேலா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவரது பதவி காலத்தில் அரசுக்கு எதிராகவும், முக்கிய பிரமுகர் களுக்கு எதிராகவும் கடுமையான தீர்ப்புகளை வழங்கியதால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை நியமித்து, அவருக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஹெச்.வகேலா ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு கடந்த ஏப்ரலில் மாற்றப்பட்டார்.

இதனையடுத்து இன்று அவர் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்