ஆந்திரமும் தெலங்கானாவும் என் இரு கண்கள்: சந்திரபாபு நாயுடு உணர்ச்சிகரம்

By என்.மகேஷ் குமார்

ஆந்திரமும் தெலங்கானாவும் தனி மாநிலங்களாகப் பிரிந்தாலும் இரண்டுமே என்னிரு கண்கள் போன்றவை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

என்.டி.ஆரின் பிறந்தநாளையொட்டி, ஹைதராபாத் அருகே உள்ள ரங்காரெட்டி மாவட்டம், கண்டிபேட்டை பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் 34-வது மாநாடு தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டை சந்திரபாபு நாயுடு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, என்.டி.ராமாராவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், புகைப்பட கண்காட்சி மற்றும் ரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

இளைஞர்கள் அதிகமுள்ள இக்கட்சி மூலம் நாட்டுக்கு பல நன்மைகள் செய்ய இயலும். 50 நாட்களில் 54 லட்சம் பேர் இக்கட்சியில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் விவசாய தொழில் பெரும் நஷ்டம் அடைந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் நாடு முழுவதும் 24 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2004-ம் ஆண்டில், ஒருங்கிணைந்த மாநிலமாக தேர்தலை சந்தித்தோம். ஆனால், 2009-ல் தெலங்கானா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மாநிலப் பிரிவினையை ஏற்று மத்திய அரசுக்கு கடிதம் வழங்கினோம். இரண்டு மாநிலங்களுக்கும் சமமான வளர்ச்சி தேவை. இதனால் எனக்கு இரண்டு மாநிலங்களும் இரண்டு கண்களை போன்றவை.

தெலுங்கர்கள் வாழும் வரை தெலுங்கு தேசம் கட்சி நிலைத்து நிற்கும். இக்கட்சியை தேசிய கட்சியாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆந்திர அரசு எப்போதும் தயாராக உள்ளது. புதிய ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்