நக்கீரன் கோபால் மீதான வழக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

By எம்.சண்முகம்

நக்கீரன் கோபால் மீது தொடரப் பட்ட அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாரம் இருமுறை வெளிவரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் அச்சிடுபவ ராக கோபால் உள்ளார். இவர் மீது ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் 15 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோபால் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘குற்ற வியல் நடைமுறைச் சட்டம் 122(2)-ன் படி, அனுமதி பெற்று குற்றவியல் நீதிமன்றத்தில் மாநகர வழக்கறிஞர் மூலம் அவதூறு வழக்கு தொடரப்படுகிறது. இந்த அனுமதி மாநில அரசால் இயந்திரத்தனமாக வழங்கப்படுகிறது. எதிர்த்து எழுதும் பத்திரிகைகளின் மீது இந்த சட்டப்பிரிவு தவறாக பயன் படுத்தப்படுகிறது. எதிர் விமர்சனம் செய்பவர்களை அச்சுறுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 499 மற்றும் 500-ன் கீழ், கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக இருப்ப தால், இந்த பிரிவை ரத்து செய்ய வேண்டும். என் மீது தொடரப்பட் டுள்ள அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கோபால் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய சட்டத்துறை, தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இதேபோன்று, அவதூறு வழக்கு தொடர வகை செய்யும் சட்டப் பிரிவை நீக்கக் கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுப்ரமணிய சாமி, ராகுல்காந்தி ஆகியோரும் வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்