ஹைதராபாத்தில் துணிகர சம்பவம்: ஏடிஎம்மில் துப்பாக்கிச் சூடு- பெண்ணிடம் பணம் கொள்ளை

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் நேற்று காலை பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

ஹைதராபாத் மதுரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீலதா. இவர் நேற்று காலை 7.30 மணியளவில் யூசகூடா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது கைகுட்டை யால் முகத்தை மூடிய ஒருவர் அதே ஏடிஎம்முக்குள் நுழைந்தார்.

அப்போது அந்த நபர் ஸ்ரீலதாவிடம், “நான் மிகவும் கஷ்டப்படுகி றேன். எனக்கு பணம் தேவைப்படுகிறது. ஆதலால் உன் னிடம் உள்ள நகை, பணத்தை உடனடியாகக் கொடுத்து விடு” எனக் கூறியுள்ளார். இதற்கு ஸ்ரீலதா மறுப்பு தெரிவிக்கவே, தான்னிடமிருந்த நாட்டு துப்பாக்கியால் சுவரை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளார். இதனால் பயந்துபோன ஸ்ரீலதா, தான் அணிந்திருந்த தங்க கம்மல்கள், செயின், மோதிரம் ஆகியவற்றை கழற்றிக் கொடுத்துள்ளார்.

பின்னர் ஸ்ரீலதாவிடமிருந்த ஏடிஎம் கார்டையும் பிடுங்கிக் கொண்டு அதற்கான ரகசிய குறி யீட்டு எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்ட அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீலதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கை ரேகை நிபுணர்கள் அந்த மர்ம நபரின் கை ரேகைகளை சேகரித்தனர். இதற்கிடையே, அந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வேறு ஒரு ஏடிஎம்மிலிருந்து ரூ.3,500 பணம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஏடிஎம்மில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ பதிவுகளின் உதவியுடன் அந்த மர்ம நபரை பிடிக்கும் பணியில் 2 தனிப்படை போலீஸார் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்