கிர் காடுகளில் சிங்கங்கள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

By டி.எல்.சஞ்சீவி குமார்

உலகில் கிர் காடுகளில் மட்டுமே இருக்கும் ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு மே 2-ம் தேதி தொடங்கி வரும் 5-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. முதல்முறையாக 25,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் கணக்கெடுப்பு நடத்தப்படவிருக்கும் நிலையில் சிங்கங்களின் எண்ணிக்கை கூடியிருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய சிங்கங்கள் என இருவகை சிங்கங்கள் உலகில் இருக்கின்றன. இதில் ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே இருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 300 சிங்கங்கள் இருப்பது தெரிந்தது. இந்த எண்ணிக்கை 2005-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 359 மற்றும் 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 411 என்று உயர்ந்தது.

கிர் காடுகளில் சிங்கங்களை ஆய்வு செய்து வரும் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவர் சிங்கங்கள் கணக்கெடுப்பு குறித்து `தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த காலங்களில் அதிகபட்சம் 10,000 சதுர கி.மீட்டர் பரப் பளவில் மட்டும் சிங்கங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது முதல்முறையாக சவுராஷ்டிரா பகுதியில் கிர் சரணாலயம், கிர் தேசிய பூங்கா, பனியா, மித்யாலயா, கிர்நர் சரணால யங்கள் மற்றும் பாவ் நகர், ஜாம் நகர், போர்பந்தர், ராஜ்கோட் வனப் பகுதிகளில் 25,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் சிங்கங்கள் கணக்கெடுப்பு மே 2-ம் தேதி தொடங்குகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் வனத் துறையினர் மற்றும் கானுயிர் ஆர்வலர் கள் உட்பட சுமார் 30,000 பேர் கலந்து கொள்கின்றனர். புலிகளைப் போல அல்லாமல் சிங்கங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவற்றை கண்ணால் பார்த்து புகைப்படம் எடுப்பது, காலடித் தடத்தை அடையாளம் காண்பது, ஜி.பி.எஸ். உதவியுடன் கண்டறிவது ஆகிய முறைகளில் மட்டுமே கணக்கெடுக்கப்படுகின்றன. கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஐந்தாண்டிலும் சராசரியாக 50 சிங்கங்கள் வரை எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இம்முறையும் சிங்கங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

கிர் சரணாலயத்தின் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் கிர் காடுகளில் 250 சிங்கங்கள் இறந்துள்ளன. இவற்றில் ரயில் விபத்து, சாலை விபத்து, கிணறுகளில் விழுவது, மின் வேலி தாக்குதல் எனசுமார் 15 சிங்கங்கள் விபத்தில் இறந்தன. மற்றவை வயது மூப்பு காரணமாக இறந்தன.

சிங்கங்களில் இனப் பெருக்க விகிதாச்சாரமும் குறைவுதான். அதனால், தற்போது கிர் காடுகளில் இருக்கும் ஒவ்வொரு சிங்கத்துக்கும் ரேடியோ காலர் பொருத்தி ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணித்து வருகிறோம். அதனால், சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பது உறுதியாக தெரியும். ஆனாலும் கணக்கெடுப்புக்கு பின்பே அதிகாரபூர்வமான எண்ணிக்கை வெளி யிடப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்