தவறான செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி அரசு முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லி அரசு பற்றி தவறான செய்திகளை வெளியிடும் பத் திரிகை மற்றும் செய்தி சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கடந்த 6-ம் தேதி தனது செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி வினய் பூஷண் மூலமாக ஓர் உத்தரவை அனுப்பியுள்ளார்.

அதில், “முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பற்றி தவறாகப் பேசுவோர், செய்தி வெளியிடுவோர் பற்றி உள்துறை அமைச்சக முதன்மை அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும். அவர், இதுகுறித்து விசாரித்து சட்ட அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்புவார். அவர்கள், ஐபிசி 499/500 பிரிவுகளில் வழக்கு தொடர அளிக்கும் பரிந்துரையின் பேரில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் இரண்டாவது முறை யாக முதல்வர் பதவி வகிக்கும் கேஜ்ரிவால் தனக்கு எதிரான செய்தி களை வெளியிடும் பத்திரிகை, சேனல்களை தொடர்ந்து கடுமை யாக விமர்சித்து வருகிறார்.

அவர் கடந்த வாரம், “டெல்லி பத்திரிகையாளர்களில் சிலர் பிறரிடம் பணம் வாங்கிக்கொண்டு என் மீதும், எனது அரசு மீதும் தவறான செய்திகளை வெளியிடு கின்றனர்” என்று குற்றம் சாட்டி யிருந்தார். ஆம் ஆத்மி கட்சியில் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸ் தொடர் பாக வெளியான செய்தியே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மணமான ஓர் இளம்பெண்ணுடன் குமார் விஷ்வாஸுக்கு தவறான தொடர்பு இருப்பதாக ஒரு செய்தியில் சந்தேகம் எழுப்பப் பட்டது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று சமூக வலைதளங்களில் வெளி யான புகைப்படங்கள் இதற்கு ஆதாரமாக இருந்தன.

இப் பிரச்சினையில் அப் பெண், டெல்லி மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். இது பரவலான செய்தி யாக வெளியானதில் கேஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியினர் இதை வெளியிட்ட ஊடகங்கள் மீது கடும் கோபம் கொண்டனர். இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட தவறான செய்திகள் வெளியிடு வோர் மீது அவதூறு வழக்கு தொடுக்க கேஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி அரசு அதிகாரிகள் கூறும் போது, “இந்த உத்தரவை, டெல்லியின் பெரும்பாலான அதி காரத்தை தன்னிடம் வைத்திருக்கும் மத்திய அரசு ஆதரிக்கவில்லை. இதனால் அவர்கள் அனுமதியின்றி வழக்கு தொடுக்க முடியுமா என்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் நேர்மையாக செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு அரசு சார்பில் நிதியுதவி செய்யவும் முதல்வர் ஆலோசித்து வருகிறார். இதுபோன்ற யோசனைகள் அவருக்கு பத்திரிகை ஆலோசக ராக இருக்கும் முன்னாள் பத்திரி கையாளர் நாகேந்தர்சிங் அளித்து வருகிறார்” என்றனர்.

வழக்கமாக நாளேடு, வார இதழ், மாத இதழ்களில் வரும் அரசு தொடர்பான செய்திகளை மட்டும் டெல்லி அதிகாரிகள் தொகுத்து வந்தனர். இந்த உத்தரவுக்குப் பின் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தொலைக்காட்சியின் அனைத்து செய்தி சேனல்களையும் பார்த்து, டெல்லி அரசு தொடர்புடைய செய்திகளை பதிவு செய்யத் தொடங்கி யுள்ளனர். டெல்லி அரசின் இந்த உத்தரவுக்கு அம்மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்