கூட்டணி முயற்சிகள் முடிந்துவிட்டன: லாலு பிரசாத் யாதவ்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாக ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் டெல்லியில் முகாமிட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், கூட்டணி விவகாரத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பிஹார் திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, கூட்டணி அமைக்கும் காலக்கெடு முடிந்துவிட்டது, இனி தேர்தல் பிரச்சார களம் காண வேண்டும் என்றார்.

ராம் விலாஸ் பாஸ்வானின், லோக் ஜன சக்தி கட்சி, லாலுவுக்கு கை விரித்துவிட்ட நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்காம ஆயத்தப் பணிகளை தனது கட்சி தனியாகவே துவக்கும் என லாலு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காத்திருந்து தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடர கால அவகாசம் இல்லை, என்றும் லாலு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்