சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் எம்.பி.யும் அவரது கணவருமான சசி தரூரின் உதவியாளர், டிரைவர் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் 3 பேர் பொய்யான தகவலை கூறுவதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் டெல்லி காவல்துறை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுனந்தா புஷ்கர், டெல்லியில் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், தான் தங்கியிருந்த அறையில் கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி மர்மான முறையில் இறந்து கிடந்தார். தனது கணவரின் விவகாரங்களில் தலையிடுவதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார் உடன் ட்விட்டர் மூலம் மோதலில் ஈடுபட்ட பிறகு அவர் இறந்ததால், அவரது மரணம் சர்ச்சைக்குள்ளானது.
இந்த வழக்கை கடந்த ஜனவரி 1-ம் தேதி கொலை வழக்காக பதிவுசெய்த டெல்லி காவல்துறை, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது.
டெல்லியில் உள்ள சசிதரூரின் வீட்டில் அப்போது பராமரிப்புப் பணிகள் நடந்ததால், தரூர் தம்பதியர் ஹோட்டலில் தங்கியதாக உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago