ஆந்திராவில் ஓட்டு கேட்க வெங்கய்யாவுக்கு உரிமை இல்லை: கம்யூனிஸ்ட் நிர்வாகி தாக்கு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நேற்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முன்னதாக, நேற்று காலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை முற்றுகையிடுவதற்காக, விஜயவாடாவில் அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்று கூடினர்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி பாபு ராவ் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்.

மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்த பின்னர் வெங்கய்ய நாயுடு இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்.

எனவே இவருக்கு இனி ஆந்திர மக்களிடம் ஓட்டு கேட்க உரிமை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்