மாவோயிஸ்ட் என்பதற்காக யாரையும் கைது செய்யக்கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பாலகிருஷ்ணன், மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸார் அவரை கைது செய்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி முகமது முஸ்டாக் கடந்த 22-ம் தேதி தீர்ப்பளித்தார்.
மாவோயிஸ்ட் ஆக இருப்பது குற்றம் அல்ல, அவர் சட்டத்தை மீறினால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். ஷியாம் பாலகிருஷ்ணணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா நிருபர்களிடம் கூறியபோது, ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago