ஊடக சுதந்திரம் என்ற பெயரில் விதிகளை மீறும் டி.வி. சேனல்கள்: சமூக ஆர்வலர்கள் புகார்

By வித்யா வெங்கட்

கடந்த 2013-14-ம் ஆண்டில் டி.வி. சேனல்கள் 13 ஆயிரம் முறை விதிகளை மீறியுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் எலெக்ட்ரானிக் ஊடக கண்காணிப்பு மையம் (இஎம்எம்சி) கூறியுள்ளது.

இந்திய டி.வி. சேனல் நிகழ்ச்சி களுக்கு மிகக் குறைந்த அளவே கட்டுப்பாடுகள் இருப்பதை வெளிப்படுத்தும் முயற்சியில் ‘மீடியா வாட்ச் இந்தியா’ என்ற அமைப்பில் பணியாற்றும் குண்டூரைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் எடாரா கோபி சந்த் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.

மத்திய தகவல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட உத்தரவுக்குப் பிறகு, நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கான விதிமுறைகளை டி.வி. சேனல்கள் மீறியது தொடர்பாக தகவல்களை இஎம்எம்சி வெளியிடுவதில் தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி கோபி சந்த் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த மே மாதம் இஎம்எம்சி இத்தகவல்களை வெளியிட்ட பிறகு 2014-15-ல் டி.வி. சேனல்களின் பல்வேறு விதிமீறல்கள் வெளிச் சத்துக்கு வந்தன. நிகழ்ச்சிகளில் குறுக்கிடும் வகையில் திரையின் ஒரு பகுதியில் பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்புவது, ஸ்க்ரோலிங் (திரையில் நகரும்) விளம்பரங்கள் வெளியிடுவது, செய்திகள், உரையாடல்கள் என்ற பெயரில் விளம்பர நிகழ்ச்சிகளை கொடுத்தது என 5,566 விதிமீறல்கள் நடந்துள்ளதாக இஎம்எம்சி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

1994-ம் ஆண்டின் கேபிள் நெட் வொர்க் விதிகள், பிரிவு 7(10)-ன்படி நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களை யும் தனித் தனியே ஒளிபரப்ப வேண்டும். நிகழ்ச்சிகளில் எந்த வகையிலும் விளம்பரங்கள் குறுக் கிடக்கூடாது. நிகழ்ச்சியின்போது, திரையின் கீழ்ப்பகுதியில் அசை வற்ற நிலையிலோ அல்லது நகரும் வகையிலோ இவற்றை ஒளிபரப்பக் கூடாது. ஆனால் குறிப்பிட்ட வகை மதுபானங்கள், புகையிலை பொருட்களை குறிப்பால் உணர்த் தும் வகையிலான விளம்பரங்கள் சேனல்களில் 2,965 முறை வெளி யானதாக இஎம்எம்சி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து கோபி சந்த் கூறும் போது, “விதிமீறல்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை மட்டுமே வெளி யிடுவதால் எந்தப் பயனும் இல்லை. விதிகளை மீறும் சேனல்களின் பெயர்களுடன், அவர்கள் மீறிய விதிகள், விதிமீறலின் தன்மை என விளக்கமாக வெளியிடவேண்டும். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச் சகம் இந்த புள்ளிவிவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஊரறிந்த ரகசியம். இந்த அமைச்சகம் ஆலோ சனை குறிப்புகளை மட்டுமே எப் போதாவது அனுப்புவதால், எந்த சேனலும் அதை பொருட் படுத்துவதில்லை” என்றார்.

இஎம்எம்சி இணைய தளத்தில் கிடைத்த தகவலின்படி, 2014-ல் நடந்த விதிமீறல்களில் 37 % அநாக ரிகம் அல்லது ஆபாசம் கொண்ட தாக உள்ளது. 11 சதவீதம் பெண்கள் தொடர்பானதாக உள்ளது. ஆனால் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறும் போது, “டி.வி. சேனல்கள் மீது இது போன்ற புகார்கள் எதுவும் எனது அலுவலகத்துக்கு வருவதில்லை. சமூக வலைதளங்கள் மீதுதான் அடிக்கடி வருகிறது. டி.வி. சேனல் கள் மீது புகார்கள் வந்தாலும் இன்றைய காலகட்டத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவற் றுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என நான் வியப்பதுண்டு” என்றார்.

கோபி சந்த் மேலும் கூறும்போது, “ஊடக சுதந்திரம் என்ற பெயரில் சேனல்கள் விதிகளை மீறுகின்றன. விதிகளை மீறும் டி.வி. சேனல்களின் ஒளிபரப்புக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சில நாட்களுக்கு தடை விதிக்கும்போது, அந்த சேனல்கள் நீதிமன்றம் சென்று அதற்கு தடை பெறுவது வழக்கமாக உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்