திருப்பதியில் 20 தமிழர்கள் பலியான என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முடியாது: ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By என்.மகேஷ் குமார்

திருப்பதி என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முடியாது என்று ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உறவினர்கள் சார்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில், ‘இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும், ஆந்திர மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ரவிசங்கர் அய்யனாரை நீக்க வேண்டும்’ எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற இயலாது.

இம்மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் நேற்று அளித்த உத்தரவில், ரவிசங்கர் அய்யனார் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுகுறித்து, தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும். நஷ்ட ஈடு வழங்குவது எங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை.

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல் லப்பட்டவர்களின் மறுபிரேத பரிசோதனை அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளனர்.

மீண்டும் செம்மரம் கடத்தல்

செம்மரம் வெட்டிக் கடத்திய தாக 20 தமிழர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர் பாக, தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள சந்திரகிரி மண்டலம் கல்யாணி அணைக்கட்டு பகுதியில் நேற்று காலை செம்மரம் வெட்டிக் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு ஆந்திர வனத் துறையினர் விரைந்து சென்றனர். அப்போது, காரில் செம்மரங்களை கடத்திய 4 பேரை கைது செய்தனர். கார், ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்