‘‘மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இருந்த அரசு, விவசாயிகளை பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சாகடித்து விட்டது’’ என்று மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக மக்களவையில் நேற்று ராகுல் காந்தி பேசியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. விவசாயி களை பாதிக்காத வகையில் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரு சில நாட்களில் அந்த சட்டத்தை பாஜக கூட்டணி அரசு சாகடித்து விட்டது. காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தில் இருந்த முக்கியப் பிரிவுகளை பாஜக நீக்கி உள்ளது.
‘நிலத்தை கையகப்படுத்தும் போது, விவசாயிகளின் கருத்தை கேட்க வேண்டும்’ என்ற முக்கிய பிரிவை பாஜக அரசு நீக்கி உள்ளது. இந்தச் சட்டத்தால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது பற்றி தெளிவாகக் கூறவில்லை. பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமாக மோடி அரசு செயல்படுகிறது.
நிலத்தை கையகப்படுத்த அரசு நினைத்தால், நாங்கள் யாரையும் (விவசாயிகளை) கேட்காமல் நிலத்தை எடுத்துக் கொள்வோம் என்று அரசு சொல்கிறது. இந்தச் சட்டத்தால் சமூகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்த ஆய்வு இல்லை. இந்த திட்டத்தால் யாருக்கு பலன் என்பது குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
நிலத்தை கையகப்படுத்திய பின், 5 ஆண்டுகளுக்குள் எந்தத் திட்டமும் அங்கு கொண்டு வரப்படவில்லை என்றால், அந்த நிலத்தை விவசாயிகளுக்குத் திருப்பி தர வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில்தான் காங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த பிரிவையும் பாஜக அரசு நீக்கி உள்ளது. நிலம் கையகப்படுத்திய பிறகு 5 ஆண்டோ அல்லது 50 ஆண்டுகளுக்குள்ளோ திட்டம் முடிவடைந்தாலும், நிலத்தை மட்டும் விவசாயிகளுக்குத் திருப்பித் தர மாட்டார்கள்.
நாட்டில் பயன்படுத்தாத நிலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை எடுப்பதற்கு பதில் விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பதில் பாஜக அரசு முனைப்பாக இருக்கிறது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago