எந்தப் பாரபட்சமும் காட்டாமல் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் மருத்துவம், ஆயுள் காப்பீடு வேண்டும்: மாநிலங்களவை நிலைக்குழு பரிந்துரை

By ஐஏஎன்எஸ்

‘‘எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். அவர்களை பாரபட்சமாக நடத்தக் கூடாது’’ என்று மாநிலங் களவை நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் ஹெச்ஐவி/எய்ட்ஸால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியாவுக்கு அடுத்த நிலையில், எய்ட்ஸ் பாதித்தவர்கள் அதிக எண்ணிக் கையில் உள்ள 3-வது நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், ஹெச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்த மசோதா இந்தியாவில் ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பது, அவற்றைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வழி வகை செய்யும். மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்படுவதைத் தடுக்கும். அத்துடன், அவர்களுக்கு அளிக் கப்படும் சிகிச்சை விவரங்கள் மிக ரகசியமாக இருக்கும். எய்ட்ஸ் பாதித்தவர்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க இந்த மசோதா வழி வகை செய்யும். இந்நிலையில், சுகாதார அமைச்சகத்துக்கான மாநிலங்களவை நிலைக் குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நிலைக்குழு, தனது அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் அளிக்கப்பட்டுள்ள பரிந் துரைகள் விவரம் வருமாறு:

ஹெச்ஐவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பாரபட்சமாக நடத்தகூடாது. அவர்களுக்கும் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும். வழக்கமாக மற்றவர்க்கு வழங்கப்படும் காப்பீடுகளுக்கு வசூலிக்கும் பிரீமியம் தொகையையே எய்ட்ஸ் பாதித்தவர்களிடமும் வசூலிக்க வேண்டும். இந்த மசோதாவில், எய்ட்ஸ் நோயாளிகளின் நலனுக்காக குறை தீர்ப்பு அதிகாரி நியமனம் குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த அதிகாரி நியமனம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு பாரபட்சமின்றி மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு வழங்குவது குறித்து, ‘காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்’ (ஐஆர்டிஏ) கவனத்துக்கு சுகாதாரத் துறை கொண்டு செல்ல வேண்டும். இந்த மசோதாவை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மாநிலங்களவை நிலைக்குழு பரிந் துரை அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்