நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதே மோடி அரசின் லட்சியம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று ஹைதராபாத்தில் கூறியதாவது:
மத்திய அரசின் ஓராண்டு கால ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்திசெய்ய மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நகர வாழ்க்கைஏழைகளுக்கு அனுகூலமாக இல்லை.ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். கிராமங்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஏழ்மையை முற்றிலுமாக ஒழிப்பதே மோடி அரசின் பிரதானலட்சியம்.
ஏழைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, வீடு கட்டும் திட்டம், ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதல் போன்ற பணிகளை தொடங்க உள்ளோம். வரும் 2020-ம் ஆண்டுக்குள் ஏழைகள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டித் தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளோம். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago