அதிபர் ஒபாமாவுடன் சந்திரபாபு மகன் சந்திப்பு

By என்.மகேஷ் குமார்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் சந்தித்து உரையாடியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேச கட்சியின் நிர்வாகி யாகவும் உள்ள லோகேஷ், கட்சி நிதி திரட்டவும், ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக‌ அங்குள்ள தொழில் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் அவர், நேற்று அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து உரை யாடினார்.

இதுகுறித்து அக்கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:

கட்சியின் வளர்ச்சிப் பணி களுக்காக அமெரிக்காவில் உள்ள‌ தெலுங்கு சங்கங்களிடமும், வேறு சில அமைப்பினரிடமும் நிதி திரட்ட லோகேஷ் ஒரு வார சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இவர், நேற்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை போர்ட்லாண்டில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது ஆந்திரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், புதிய தொழில் தொடங்க இங்குள்ள வசதி கள் குறித்து அவர் அதிபரிடம் விவரித்தார். மேலும் ஆந்திரத்தில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரங்கள் குறித்தும் தெரிவித்தார். இதற்கு ஒபாமா, ‘நானும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து அறிந்துள்ளேன். எனது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவியுங்கள்' என கூறியுள்ளார்.

மேலும் அங்குள்ள தொழில் துறை அதிகாரிகள், தொழிலதி பர்கள் ஆகியோரிடமும் லோகேஷ் பேச்சு வார்த்தை நடத்தி, ஆந்திராவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்