திருப்பதியில் பக்தர்களிடம் நகை, பணம் திருட்டு: 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களிடமிருந்து நகை, பணம் போன்றவற்றை திருடும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பதி, திருமலை ஆகிய பகுதிகளில் வெளிமாநில பக்தர் களின் நகை, பணம் போன்றவை அடிக்கடி திருடு போவதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதுகுறித்து திருமலை, திருப்பதி போலீஸார் வழக்கு பதிவு செய்து திருட்டு கும்பலை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நகரி ஓ.ஜி. குப்பம் பகுதியைச் சேர்ந்த நாகராஜு, கோவிந்து, சாம்சன், நிவாசுலு, சுப்ரமணியம், மகேந்திரா ஆகியோரை அலிபிரி மலைவழிப்பாதையில் சந்தேகத் தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தனர். இவர்கள் திருமலைக்கு வரும் பக்தர்களின் பையிலிருந்து நகை, பணம் போன்ற வற்றை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்களை கைது செய்த போலீஸார், இவர் களிடமிருந்து ரூ. 10. 24 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல கர்னூல் மாவட்டம், கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாணி, வெங்கட ரமணம்மா மற்றும் கோவர்தன் ஆகிய மூன்று பேரையும் திருமலை போலீஸார் நேற்று கைது செய்தனர். திருமலையில்பதிவாகி உள்ள 6 திருட்டு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து ரூ. 3.67 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்