கடந்த ஓராண்டில் மத்திய அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது, எந்நேரமும் அரசு செயல்படும் நிலையில் இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து ராஜ்நாத் சிங் நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசின் கடந்த ஓராண்டு செயல்பாடுகளை ஆராயும் எவரும், மோடி தலைமையிலான அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்ற முடிவுக்கே வருவார்கள்.
மிகச் சிறப்பான என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்பாத சிலரும் கூட, கடந்த ஓராண்டில் இந்த அரசு எந்நேரமும் செயல்படும் நிலையில் இருந்தது என்ற உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் தடம்புரண்டு, அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்தது. ஆனால் இன்று மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.
முந்தைய ஆட்சியில் நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதத்துக்கு உட்பட்டே இருந்தது. ஆனால் இது தற்போது 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 3 - 4 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஜி-20 நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு இது முறையே சுமார் 4% மற்றும் 3.8% என்ற அளவிலேயே உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago