ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை (வெள்ளிக்கிழமை) மறு விசாரணை நடைபெறுகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பாக டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசிக்கத் தேவையில்லை என்றும் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.
ஆனால், டெல்லி உயர் நீதிமன்றமோ, உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கு துணைநிலை ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மனீந்தர் சிங் வாதிட்டார். இதனை ஏற்ற எஸ்.கே.சிக்ரி, யு.யு.லலித் தலைமையிலான விடுமுறை கால அமர்வு மத்திய அரசு மனு மீது நாளை மறு விசாரணை நடைபெறும் என தெரிவித்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago