செம்மரக் கடத்தல் தொடர்பாக சீனாவை சேர்ந்தவர் கைது

By என்.மகேஷ் குமார்

செம்மரக் கடத்தல் தொடர்பாக சீனாவை சேர்ந்த சர்வதேச கடத்தல்காரன் யாங் பிங்கை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி என்கவுன்ட்டர் சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர போலீஸார், கடந்த ஒரு மாதமாக கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். இதில் சென்னையை சேர்ந்த சவுந்தர்ராஜன், நடிகர் சரவணன் உட்பட பலரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த யாங் பிங், துபாயை சேர்ந்த ஷாகுல் ஹமீத் ஆகிய சர்வதேச செம்மரக் கடத்தல் வியாபாரி களை பிடிக்க ஆந்திர போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் யாங் பிங் ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பது சித்தூர் போலீஸாருக்கு தெரியவந்தது. உடனே போலீஸார் ஹைதராபாத்தில் முகாமிட்டு யாங் பிங்கின் நடவடிக்கைகளை உளவு பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்தில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் சித்தூருக்கு அழைத்து வந்து, மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். யாங் பிங்கை வரும் 21-ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் நேற்று மாலை சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த செம்மரக் கடத்தல்காரர் ஸ்ரீநிவாச ரெட்டியையும் போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்