பல வருடங்களாக டெல்லி போலீஸார் பயன்படுத்தி வந்த உல்லன் துணியாலானதை மாற்றி பருத்தியாலான தொப்பி அளிக்கப்பட உள்ளது. இதனால் கோடைக் காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் கடும் சிரமங்கள் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி போலீஸார் மற்றும் அதன் அதிகாரிகள் அணியும் ‘பரேட்’ வகை தொப்பி, உல்லன் கலந்த துணியால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் சாய்ந்தபடி அழகாக தோற்றமளிக்கும் தொப்பியை சீருடையுடன் சேர்த்து அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வகை தொப்பி 1970 ஆம் ஆண்டு வாக்கில் டெல்லியின் அனைத்து போலீஸாருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட உல்லன் துணியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டும் வருகிறது.
இதை, உயர் அதிகாரிகளுக்கு நீலநிறத்திலும், மற்றவர்கள் காக்கி நிறத்திலும் அணிந்து வருகிறார்கள். உல்லன் துணியாலானதால் இந்த தொப்பி, குளிர்காலங்களில் மிகவும் இதமாக இருப்பினும் அவர்களுக்கு கோடை காலங்களில் கடும் சிரமங்களை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தலையில் அதிகமான வியர்வைகள் வெளியாகி சிலருக்கு அரிப்பு, முடி உதிர்வது உட்படப் பல்வேறுவகையான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதற்கு முடிவு கட்டும் விதத்தில் இந்த தொப்பிகளை பருத்தி துணியால் தயாரித்து புதிதாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘உல்லன் துணியாலான தொப்பியால் ஏற்படும் சிரமங்கள் மீதானப் புகார் பலஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இதனால், பல போலீஸார் பரேட் தொப்பிகளை அணிவதை தவிர்ப்பதும் உண்டு. இப்போது, டெல்லியின் காவல்துறை ஆணையரான பி.எஸ்.பாஸியின் முயற்சியால் அவர்கள் சிரமம் களையப்பட உள்ளது. இதன் எடை முன்னதை விட மிகவும் குறைவாக அமைந்திருக்கும்.’ எனக் கூறுகின்றனர்.
தற்போது அணியப்பட்டு வரும் உல்லன் துணியாலான பரேட் வகை தொப்பியின் விலை ரூபாய் 150 ஆகும். இது பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போது அதன் விலை ரூபாய் ஐம்பதாக மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய வகை தொப்பியிலும் அதன் முன்புறத்தில் டெல்லி போலீஸாரின் முத்திரை உட்பட வேறு எந்த மாற்றங்களும் இன்றி விநியோகிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்தால் முதன் முறையாக அணியத் துவங்கப்பட்டதாகக் கருதப்படும் பரேட் வகை தொப்பி, தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளின் போலீஸாரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பரேட் வகையை அணியாத டெல்லி போலீஸார் ‘பகடி’ மற்றும் ‘பி’ எனும் ஆங்கில எழுத்து வடிவிலானது என மேலும் இருவகை தொப்பிகளிலும் ஏதாவது ஒன்றை மட்டும் அணிவது உண்டு.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago