ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த ஆவணப்படம்: வெள்ளை மாளிகையில் திரையிடல்

By ஐஏஎன்எஸ்

தனது இசை அமைப்புக்காக 2009ம் ஆண்டு, இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய ஆவணப்படம் அமெரிக்காவின் ‘வெள்ளை மாளிகை'யில் திரையிடப்பட்டது.

‘ஜெய் ஹோ' என்று பெயரிடப் பட்ட அந்த 60 நிமிட ஆவணப் படம், வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டது.

இந்திய நேரப்படி வெள்ளிக் கிழமை இரவு, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘வெள்ளை மாளிகையில் ‘ஜெய் ஹோ' படம் திரையிடலுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்'' என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர் என்று ‘டைம்' இதழால் குறிப்பிடப் பட்டுள்ள இவர், பல மொழிகளில் 120க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ரஹ்மானின் இசைப் பயணத்தையும், அவரின் சாதனைகளையும் குறித்து பேசும் இந்தப் படத்தை உமேஷ் அகர்வால் இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்