செம்மரக் கடத்தலில் தொடர்புடைய சர்வதேச வியாபாரி ஹரியாணாவில் கைது: ரூ.20 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்

By என்.மகேஷ் குமார்

செம்மரக் கடத்தலில் சர்வதேச அளவில் செயல்படும் வியாபாரி ஒருவரை கடப்பா போலீஸார் நேற்று ஹரியாணாவில் கைது செய்து ரூ. 20 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை, ஆந்திர அதிரடி போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆந்திர அரசு சார்பில் டிஜிபி தலைமையில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையமும் இச்சம்பவத்தில் தலையிட்டது. இதன் உறுப்பினர் தத்தூ தலைமையிலான குழு என்கவுன்ட்டர் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியது. விரைவில் இக்குழு தனது அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அளிக்கவுள்ளது.

இதனிடையே திருப்பதி என்கவுன்டரை தொடர்ந்து செம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்க ஆந்திர போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சீனாவைச் சேர்ந்த கடத்தல் வியாபாரி யாங் பிங், சென்னையைச் சேர்ந்த சவுந்தரராஜன், நடிகர் சரவணன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி, நடிகை நீத்து அகர்வால் உட்பட 40-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வெட்டப்படும் செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த ஹரியாணாவை சேர்ந்த பிரபல கடத்தல் வியாபாரி முகேஷ் பலானியை பிடிக்க கடப்பா போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முகேஷ் பலானி, ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் தலைமறைவாக உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற கடப்பா போலீஸார் அம்மாநில காவல்துறை உதவியுடன் நேற்று காலை முகேஷ் பலானியை கைது செய்தனர். மேலும் வெளிநாடுகளுக்கு கடத்த தயாராக இருந்த ரூ. 20 கோடி மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

தற்போது முகேஷ் பலானியை கடப்பாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இவரை விசாரிப்பதன் மூலம் மேலும் பல கடத்தல் வியாபாரிகள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்