செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியல்: டைம் பத்திரிகையில் மோடி பற்றி ஒபாமா குறிப்புரை

By பிடிஐ

டைம் பத்திரிகை கருத்துக்கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மோடி பற்றி குறிப்புரை எழுதி இருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அதில்,

இந்தியாவின் தலைமை சீர்திருத்தக்காரர் என்ற தலைப்பில் இந்த குறிப்பை எழுதியுள்ள ஒபாமா, வறுமை வாழ்க்கையிலிருந்து உயர்ந்து பிரதமரானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

"மோடி பிரதமரானது துடிதுடிப்பு, ஆற்றலுடன் கூடிய இந்தியாவின் எழுச்சியை பிரதிபலிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக அவர் திகழ்கிறார்.

இந்தியாவில் வறுமையை ஒழிக்கவும் கல்வியை மேம்படுத்தவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இந்தியாவின் பொருளாதார சக்தியை வெளிப்படுத்தவும் லட்சிய திட்டங்களை அவர் வகுத்துள்ளார், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் மோடி இந்தியாவின் பொருளாதாரச் சக்திகளை வெளிப்படுத்துகிறார்.

இந்தியாவை போலவே பண்டைய காலம் நவீனம் ஆகிய இரண்டையும் கடந்து நிற்கிறார், யோகாவின் பக்தராகிய மோடி இந்தியக் குடிமக்களை ட்விட்டர் மூலம் தொடர்பு கொள்கிறார், டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற முயற்சி செய்கிறார்" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்