பெங்களூரு சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பினார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பிய சம்பவம் சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைதான மஞ்சுநாத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளாக அவருக்கு அங்குள்ள காவலர்கள் மற்றும் கைதிகளிடம் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை மாலை காவலரிடம் சென்று, “பரோலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சிறைத்துறையின் நிர்வாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்” என மஞ்சுநாத் கூறியுள்ளார். காவலர் அனுமதித்த பின் நிர்வாக அலுவலகத்தில் சற்று நேரம் இருந்த மஞ்சுநாத்,மறைவான இடத்துக்கு சென்று தனது கைதி உடையை மாற்றியுள்ளார். பின்னர் நிர்வாக அலுவலகத்தில் பார்வையாளர் வரும் இடத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த காவலரிடம் கைதியை சந்திக்க வந்திருப்பதாகக் கூறி, வருகைப் புத்தகத்தில் முகவரியை எழுதிக் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து காவலர்கள் அவருக்கு, பார்வையாளரின் கையில் குத்தப்படும் சிறைத்துறை முத்திரையை குத்தியுள்ளார்.

இதையடுத்து மஞ்சுநாத் அங்கிருந்து முதல் நுழைவாயிலை நோக்கி நடந்தார். அப்போது ஒரு காவலர் அவரை அடையாளம் கண்டு தடுத்தபோது, ''நான் ஏற்கெனவே பரோலில் சென்றிருந்தேன். தற்போது எனது பரோலை புதுப்பிக்க சிறைக்கு வந்தேன். எனது கையை பாருங்கள். பார்வையாளர் முத்திரை இருக்கிறது'' என காட்டியுள்ளார். எனவே அதை நம்பிய காவலர் மஞ்சுநாத்தை வெளியே அனுப்பிவிட்டார்.

பிறகு பிரதான நுழைவாயிலிலும் தனது கையில் இருந்த முத்திரையை காவலரிடம் காட்டி வெளியேறியுள்ளார்.

பிறகு சுமார் 1 கி.மீ. நடந்தே பேருந்து நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்