பிரபல நடிகர் சல்மான் கான், மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வருகிற 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தி நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த விபத்தில் ஒருவர் இறந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறித்து தான் அறிவிக்க உள்ளதாக, நீதிபதி டி.டபிள்யூ.தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
மேலும், "இந்த வழக்கு குறித்த அனைத்து வாதங்களையும் திங்கள் கிழமைக்குள் முடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், கால அவகாசம் வழங்கப்பட மாட் டாது" என்று சல்மான் தரப்பு வழக்கறி ஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மொத்த மாக 27 சாட்சியங்கள் விசாரிக்கப் பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago