மத்திய அமைச்சர் இல்லத்தில் தேடுதல் பணிக்கு தடை

By செய்திப்பிரிவு

கோவா அரசின் முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ பசேகோ மாயமான வழக்கில், மத்திய பாது காப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் இல்லத்தில் தேடுதல் பணி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மின்சாரத் துறை ஊழியர் ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் பிரான்சிஸ் கோவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், ரூ.1,500 அபராத மும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மாத ஆரம்பத்தில், அங்கும் அதே தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதனால் கடந்த இரு வாரங் களாக‌ அவர் தலைமறைவாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் ஐரஸ் ரோட்ரிக்யூஸ் கோவா விசாரணை நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தற்போது மாயமாகி உள்ள பிரான்சிஸ்கோ புதுடெல்லி யில் 10, அக்பர் ரோடு அருகே ஒரு முறை காணப்பட்டதாகவும், எனவே அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் இல்லத்தில் பதுங்கி யிருக்கலாம் என்று சந்தேகம் ஏற் பட்டுள்ளதாகவும், அதனால் அமைச்சரின் வீட்டில் தேடுதல் வேட்டையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த‌ ம‌னுவை புதன்கிழமை விசாரித்த‌ நீதிம‌ன்ற‌ம் அமைச்ச‌ர் வீட்டில் தேடுத‌ல் ப‌ணியை மேற் கொள்ள‌ உத்த‌ர‌விட்ட‌து.

இதற்கிடையே அன்று இரவே, இந்த உத்தரவுக்கு கோவா கூடுதல் மாவட்ட நீதிபதி பி.சவாய்கர் தடை உத்தரவு பிறப்பித்ததாக, அம்மாநில முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்