துப்பாக்கிச் சூடு விவகாரம்: ஆந்திரா செல்கிறது தேசிய பழங்குடியினர் ஆணையக் குழு

By பிடிஐ

ஆந்திராவில் போலீஸ் துப்பாக் கிச் சூட்டில் 20 பேர் கொல்லப் பட்ட விவகாரத்தில் உண்மை அறிவதற்காக, தேசிய பழங்குடி யினர் ஆணைய துணைத் தலை வரின் தலைமையில் ஒரு குழு விரைவில் ஆந்திரா செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

அந்த துப்பாக்கிச் சூடு விவ காரத்தில் கொல்லப்பட்ட பெரும் பாலானோர் பழங்குடியினர் என்ற தகவல் தெரியவந்ததை யடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய பழங்குடி யினர் ஆணையத் தின் தலைவர் ராமேஷ்வர் ஓரான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆணையத்தின் துணைத் தலைவர் ரவி தக்கூர் தலைமையில், உண்மை அறிவதற்காக‌ குழு ஒன்றை ஆந்திராவுக்கு அனுப்ப உள்ளோம். அந்தக் குழு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடை பெற்ற இடத்துக்குச் சென்று பார்வையிடும். மேலும், அரசு அமைப்புகளுடனும் அது விவாதங்கள் மேற்கொள்ளும்.

இன்னும் நான்கு நாட்களில் அந்தக் குழு ஆந்திராவுக்குச் செல்ல இருக்கிறது. இதுதவிர, ஆந்திர அரசிடமிருந்தும் இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றைக் கேட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்