நேபாள பூகம்பம்: மீண்டு வந்த இந்தியர்கள் பகிர்ந்து கொண்ட துயரங்கள்

By ஒமர் ரஷித்

நேபாளத்தை உருக்குலைத்த பயங்கர நிலநடுக்கத்தின் போது நேரில் கண்ட துயரங்களை நாடு திரும்பிய இந்தியர்கள் சிலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் புனேயைச் சேர்ந்த திபேஷ் ஷர்மா கூறும்போது, “மறக்க முடியவில்லை... பயங்கரமானது...நான் இருந்த கட்டிடம் நகர்வதைப் போன்ற பயங்கரத்தை உணர்ந்தேன்.

ஷர்மாவும் அவரது குடும்பத்தினரும் நேபாள சுற்றுலாவை முடித்துக் கொண்டு காத்மாண்டூவிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இப்போது சவங்களின் நகரமாகி விட்ட பக்தாபூர் அருகே காரில் வந்து கொண்டிருந்த போது இவர்கள் கார் பூகம்பம் காரணமாக சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது.

"முதலில் எங்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. ஆனால் தூரத்தில் கட்டிடங்கள் ஆடிக் கொண்டிருந்ததையும் பயங்கரமாக விழுந்து தரைமட்டமானதையும் பார்த்தோம். மக்கள் மாடியிலிருந்து குதிப்பதையும் பார்த்தோம். சாலைகளில் கடும் விரிசல்கள் தோன்றின. நாங்கள் இருந்த கட்டிடமே நகர்ந்து வருவதான ஒரு உணர்வு... பயங்கரம்..." என்றார் ஷர்மா.

சுற்றுலாப் பயணிகளின் ‘சொர்க்கம்’ என்று கருதப்படும் நேபாளம் கண நேரத்தில் நரகமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து திரும்பிய பலரும் கூறுகின்றனர்.

விற்பனை மேலாளராக ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் மிலிந்த் புரந்த்ரே என்பவர் கூறும் போது, “எனக்கு இது 2-வது வாழ்வு என்றே கூறுவேன். நானும் என்னுடன் 26 பயணிகளும் விமான நிலையத்துக்குச் செல்ல காத்திருந்தோம், அப்போது பூகம்பம் ஏற்பட்டது.

ஒருவரும் கால்களை பூமியில் ஊன்ற முடியவில்லை. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது நிலநடுக்கம். கட்டிடங்கள் இடிந்து விழுவதையும், மரண ஓலங்களையும் கண்டோம், சாலைகள் விரிசல் கண்டது. ஹோட்டல் லாபியின் அடித்தளத்தில் பயங்கர விரிசல் ஏற்பட்டது. எங்குபார்த்தாலும் பீதி, பதற்றம்..." என்றார்.

கட்டுமான மேலாளரான ராஜ்கோட்டைச் சேர்ந்த ஹர்ஷத் கரவதாரா கூறும்போது, “இனி நேபாள் என்றாலே எனது முதுகுத் தண்டு சில்லிடும். நாங்கள் ஷாப்பிங்குக்காக வெளியே வந்த போது பயங்கர பூகம்பத்தின் விளைவாக நாங்கள் தங்கியிருந்த விடுதியில் 3-வ்து தளம் இடிந்து விழுந்தது. அப்போதுதான் நாங்கள் ஆடைகள் வாங்கிய நேபாளப் பெண் ஒருவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரழ்ந்த கோரத்தையும் துயரத்தையும் நேரடியாகப் பார்த்தோம். எங்கள் விடுதியின் அடித்தளத்தில் அந்தப் பெண்மணியின் துணிக்கடை இருந்தது, என் மனைவியுடன் அந்தப் பெண் அன்புடன் பழகியிருந்தார். இது மிகப்பெரிய துயரம்..." என்றார்.

இன்னும் நிறைய இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். காத்திருத்தல் பற்றிய கவலையில் முதியவர்கள் பலர் மயங்கி விழுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்