புகையிலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று நடப்போம்: மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்

By ஏஎன்ஐ

புகையிலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று நடப்போம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் அட்டையில் படத்துடன் கூடிய எச்சரிக்கை வெளியிடும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

புகையிலைப் பொருட்களை பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உச்ச நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறும்போது, “மத்திய அரசை பொறுத்தவரை இதற்கு நாங்கள் உடன்படுகிறோம்.

இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப் போம். உச்ச நீதிமன்றத்துக்கு இணக்க மான பதிலை கூறுவோம்” என்றார்.

புகையிலைப் பொருட்கள் பயன் படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கு, உள்நாட்டு ஆதாரம் (ஆய்வு முடிவுகள்) ஏதுமில்லை என்று நாடாளுமனறக் குழு அண்மையில் கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்றாலும் புகையிலைப் பொருட்களின் அட்டை மீது படத்துடன் கூடிய எச்சரிக்கை வெளியிடும் முடிவை செயல்படுத்தும்படி சுகாதார அமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்