சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மத்திய அரசு மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
தாமஸ் பாக், பிரதமர் மோடியை இந்த மாத இறுதியில் சந்திக்கலாம். அப்போது நாட்டில் பிற விளையாட்டுக்களின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அப்போது 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வம் தெரிவிக்கலாம் என்று தெரிகிறது.
பிரதமர் மோடியை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் புதுடெல்லியில் ஏப்ரல் 27-ம் தேதி சந்திக்கலாம் என்று முதல்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013-ம் ஆண்டு ஐ.ஓ.சி. தலைவராக பாக் பொறுப்பேற்ற பிறகு இப்போது வருகை தருவாரேயானால் இந்தியாவுக்கு இது அவருடைய முதல் வருகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின் போது 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தகவல்கள் கூறுகின்றன.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் என்.ராமச்சந்திரன், பிரதமர் மோடியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் சந்திக்கவிருப்பதை உறுதி செய்தார். ஆனால் 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கோரிக்கை வைக்கப்படலாம் என்பது பற்றி அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கோரிக்கை வைக்க செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
ஏற்கெனவே இத்தாலியின் ரோம், ஜெர்மனியின் ஹாம்பர்க் மற்றும் அமெரிக்காவின் பாஸ்டன் ஆகியவை 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோ நகரிலும் 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago