சத்தீஸ்கர் மாநிலத்தில் கோண்டா காவூன் மாவட்டத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அரசு மேம்பாட்டுப் பணிகளை நடைபெற விடாமல் அவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோண்டாகாவூன் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்த சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்கும் நோக்கில் நக்ஸல்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
சாலைப் பணிகள் நடக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 டிராக்டர்கள், டிரக், ஜேசிபி வாகனம் ஆகிய 10 வாகனங்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
தனோரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இராகாவூன் அருகில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து பஸ்தார் மண்டல ஐஜி கலூரி கூறும்போது, “சாலைப் பணிகள் நடக்கும் இடத்தில் நக்ஸல்கள் 15 பேர் கருப்பு உடையில் திடீரென புகுந்துள்ளனர். அங்கிருந்த தொழிலாளர்களை மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். பின்னர் வாகனங்களை எரித்துள்ளனர். சாலைப் பணிகளை தடுக்க வேண்டாம் என்று அங்கிருந்த கிராம மக்கள் நக்ஸல்களிடம் கூறியுள்ளனர். எனினும், வாகனங்களை எரித்து விட்டுச் சென்றுள்ளனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago