ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 3 போலீஸார் பலி, 2 பேர் படுகாயம்

By சாதிக் ரஃபீக்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று அடுத்தடுத்து மூன்று இடங் களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார் பலி யாயினர். ஒரு துணை ஆய்வாளர் உட்பட 2 பேர் காயமடைந்தார்.

சுற்றுலாப் பயணிகளைக் கவர் வதற்காக காஷ்மீரில் உள்ள ஆசியா வின் மிகப்பெரிய துலிப் மலர் தோட்டம் பொதுமக்கள் பார்வைக் காக திறந்துவைக்கப்பட்ட நிலை யில் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

தீவிரவாதிகள் 3 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களில் தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் நடத்திய தாக்குதல்தான் மிகவும் மோசமானது. இதில் 3 போலீஸார் பலியாயினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சோபியான் மாவட்டம் அம்ஷிபோரா கிராமத்தில் நடைபெற்ற குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக தலைமை காவலர் முஸ்தாக் அகமது, கான்ஸ்டபிள்கள் ஷபிர் ஹுசைன் மற்றும் நசீர் அகமது வாணி ஆகிய மூவரும் சென்றனர். இவர்கள் ஆயுதம் எதையும் கொண்டு செல்லவில்லை. அப்போது, அப்பகுதியிலிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்” என்றார்.

முன்னதாக நேற்று காலை 11.45 மணிக்கு வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டன் பகுதியில் பயணிகள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த காவல் துணை ஆய்வாளர் குலாம் முஸ்தபாவை 2 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த முஸ்தபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மேலும் புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் பகுதியில் மதியம் 2.45 மணிக்கு தீவிரவாதிகள் துப்பாக்கி யால் சுட்டதில் முன்னாள் தீவிரவாதி ஒருவர் காயமடைந்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “தீவிரவாதிகள் சுட்டதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முன்னாள் தீவிரவாதி ரஃபிக் அகமது பட் காயமடைந்தார். அவர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்றார்.

இந்த மூன்று தாக்குதல் சம்பவங் களுக்கும் எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப் பேற்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்