பணத்துக்காக விற்கப்பட்ட குழந்தை மீண்டும் தாயுடன் இணைந்தது: மகளை விற்ற தந்தை கைது

By செய்திப்பிரிவு

பணத்துக்காக விற்கப்பட்ட கைக்குழந்தை மீண்டும் அதன் தாயுடன் இணைந்தது. அந்தக் குழந்தையை விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் வசித்து வருகிறார் சல்மா பேகம். இவருக்கு மூன்று வயதில் மகன் ஒருவர் உள்ளார். கடந்த 19ம் தேதி அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆனால் சல்மாவின் கணவரான புல்புல் ஹக்கிற்கு பெண் குழந்தையை வளர்க்க ஆர்வமில்லை. எனவே அதனை கூச் பெஹர் என்ற மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு ஹக் விற்றார்.

இதற்கு அதுல் பசாக் என்ற இன்னொரு ஆசிரியர் இடைத்தரகராக இருந்து உதவி புரிந்துள்ளார்.

இதுகுறித்து சல்மா கூறும்போது, "அந்த ஆசிரியரிடம் தான் கடன் பெற்றிருந்ததாக என் கணவர் என்னிடம் கூறினார். அதற்கு நான், நாம் இருவரும் உழைத்து அந்தக் கடனை அடைத்துவிடலாம் என்று கூறினேன். ஆனால், அவரோ என் குழந்தையை விற்றுவிட்டார்" என்றார்.

இதைத் தொடர்ந்து சல்மா போலீஸில் புகார் அளித்தார். ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று அந்தக் குழந்தை சல்மாவிடம் சேர்க்கப்பட்டது.

சல்மாவின் கணவரும், இடைத்தரகராக இருந்த ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தக் குழந்தை வாங்கிய ஆசிரியர் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

தற்போது சல்மாவும், அவரது இரு குழந்தைகளும் ஜல்பைகுரி மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்