பிஹார் மாநிலத்தில் வீசிய கடும் புயலுக்கு பலியானோர் எண் ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளை மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஹெலிகாப்டரில் நேற்று பார்வையிட்டார்.
பிஹார் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென கடும் புயல் காற்று வீசியது. பலத்த மழையும் பெய்ததில் பல வீடுகள் சேதம் அடைந்தன. பயிர்கள் நாசமாயின. இந்த புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண் மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகபட்சமாக புர்ணியா மாவட்டத்தில் 32 பேர் பலியாயினர். இதுதவிர, மாதேபுரா மாவட்டத்தில் 7 பேரும், மதுபணி யில் 3 பேரும், கதிஹாரில் மற்றும் சித்தமர்ஹியில் தலா 2 பேரும், தர்பங்கா மற்றும் சுபாலில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்த 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே புயலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாகல்பூர் உள்ளிட்ட பகுதிகளை ஹெலி காப்டர் மூலம் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று பார்வையிட் டார். பின்னர் பாகல்பூர் அதிகாரிக ளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜ்நாத் சிங் ஆய்வு
புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் வியாஸ் ஜீ நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புயலால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் பலியானவர்களின் குடும் பத்தினருக்கு உடனடியாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அரசை கேட்டுக் கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறும் போது, ‘‘புயலில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந் துள்ளன. மாதேபுரா, புர்ணியா, சஹர்சா, சுபால், கதிஹார், கிஷண்கஞ்ச், தர்பங்கா, பதுபானி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
அத்கேலி என்ற கிராமத்தில்தான் புயலுக்கு அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர். இதுகுறித்து முகமது அஷ்பக் என்ற விவசாயி கூறும்போது, ‘‘இயற்கை பேரழி வுக்கு எந்த வகையிலும் இந்த புயல் குறைந்ததில்லை. புயலில் என் மகன், மகள் பலியாகி விட்டனர். வீடு இடிந்து விழுந்து மண்ணோடு மண் ணாகி விட்டனர். வீடு, குழந்தைகள், பயிர் என எல்லாவற்றையும் புயல் சுருட்டி கொண்டு சென்று விட்டது’’ என்று அழுதவண்ணம் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago