கால் டாக்ஸிகளை கண்காணிக்க புதிய திட்டம்

By பிடிஐ

கால் டாக்ஸி செயல்பாடுகளை இணையதளம் மற்றும் ஆப் மூலம் கண்காணிக்க தென்னிந்திய போக்குவரத்து கவுன்சில் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் கால் டாக்ஸியில் சென்ற பெண், அதன் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து இது போன்ற குற்றங்களை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவாவில் நேற்று நிறைவடைந்த தென்னிந்திய போக்குவரத்து கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆந்திர, கேரள, கோவா, கர்நாடக, புதுச்சேரி, மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வாடகை கார் நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

இது குறித்து கவுன்சிலின் செயலாளர் ஆர்.லேகா கூறியது: எங்கள் அமைப்பில் உள்ள அனைத்து வாடகை கார் நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்.

அதன்படி அனைத்து டாக்ஸி செயல்பாடுகளும் இணையம் மூலம் கண்காணிக்கப்படும். இது விஷயத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கண்காணிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்