அயோத்தில் வாழ்ந்த கும்நாமி பாபா நேதாஜியா?- விசாரணைக்கு உ.பி. அரசியல்வாதிகள் கோரிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

'கும்நாமி பாபா' எனும் பெயரில் அயோத்தியில் வாழ்ந்த பகவான்ஜி தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனும் சர்ச்சைகள் அதிகமாகி விட்டது.

இதற்கு முடிவு கட்ட வேண்டி, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, உடனடியாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உபி மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உ.பி.யின் இரட்டை நகரமான அயோத்தி மற்றும் பைஸாபாத்தில் சுமார் 15 வருடங்களாக சுற்றிக் கொண்டிருந்தவர் பகவான்ஜி. பார்ப்பதற்கு ஒரு சாதுவை போல் தோற்றம் அளிக்கும் அவர் கோயில்களுக்கு அடிக்கடி செல்லாதவராக இருந்திருக்கிறார். தோற்றத்தில் நேதாஜியை போல் இருந்தவரது நடவடிக்கைகள் மிகவும் சதேகத்திற்கு உரியதாக இருந்தது. இதனால், அவரை அங்குள்ள மக்கள் 'கும்நாமி (காணாமல் போனவர்) பாபா' என அழைத்தனர்.

கடந்த செப்டம்பர் 18, 1985-ல் இறந்த பின் அயோத்தியின் சரயு நதிக்கரையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு அவர் தங்கியிருந்த அயோத்தியின் ராம்பவனில் உடமைகளை சோதனை இட்ட போது பகவான்ஜி எழுதிய பல கடிதங்கள் கிடைத்தனர். இதை தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரான பி.லால் ஆய்வு செய்து அவை நேதாஜியின் கையெப்பத்துடன் ஒத்து போவதாகக் கூறி இருந்தார்.

எனினும், பகவான்ஜியின் அறையில் இருந்து கிடைத்த பல், கொல்கத்தாவில் டி.என்.ஏ ஆய்வு செய்து அது நேதாஜி அல்ல எனக் கூறி விட்டனர். எனவே, நேதாஜி மறைந்த மர்மம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி மனோஜ் முகர்ஜி தலைமையிலான குழுவும் பகவான்ஜியை நேதாஜி என ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது.

இந்நிலையில், கும்நாமி பாபா மீது உபியின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேதாஜியின் மகளான லலிதா போஸ் மற்றும் மூத்த மகனான சுரேஷ் சந்திர போஸ் ஆகியோர் தொடுத்த மனுவை விசாரணைக்கு ஏற்றது. இதில் மறைந்த கும்நாமி பாபா தான் நேதாஜியா என விசாரணை செய்யப்பட வேண்டும் என உபி அரசிற்கு உத்தரவிட்டது. இன்னும் விசாரணைக் குழு அமைக்கப்படாமல் இருப்பதன் மீது உபி அரசிடம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் சார்பில் ஐந்து முறை ராய்பரேலி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அகிலேஷ்சிங் இன்று கூறுகையில், 'தாம் உயிரோடு இருந்தவரை கும்நாமி பாபா தன்னை நேதாஜி என்று கூறி வந்திருக்கிறார். சுதந்திரப் போராட்டக் கால ஆவணங்களும் அவரது அறையில் சிக்கியதாகக் கூறப்படுவதால், அதன் மீது உபி அரசு உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்.' என வலியுறுத்தி உள்ளார்.

இவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் உபி மாநில செய்தி தொடர்பாளரான விஜய் பஹதூர் பாதக், 'நேதாஜி குடும்பத்தாரை காங்கிரஸ் அரசு சுமார் 20 வருடங்கள் உளவு பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவின்படி உபி அரசு உடனடியாக விசாரணை அமைக்க வேண்டும்' எனக் கூறுகிறார்.

கடந்த ஜனவரி 31, 2013-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவில் கும்நாமி பாபாவின் உடமைகளையும் பாதுகாத்து வைத்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும் எனக் கூறி இருந்தது. இதை மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் எனக் கூறியும் அதை உபி அரசு இன்னும் செய்யாமல் இருப்பதை தொடர்ந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 18, 1945-ல் நேதாஜி பயணம் செய்த விமானம் தைவானில் விபத்துக்குள்ளானது. அதில் தீக்காயம் அடைந்த நேதாஜி அருகிலுள்ள ஜப்பான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த விட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் இதை இன்றுவரை நம்பவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்